உள்ளடக்கத்துக்குச் செல்

கோடை உழவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய்ப் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். மற்றவர்கள் நிலத்தைத் தரிசாக விடுவர். சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்களை இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன. தமிழக அரசின் வேளாண்மைத் துறை விவசாயிகள் இடையே கோடை உழவின் முக்கியத்துவம் குறித்துப் பயிற்சிகளை நடத்தியுள்ளது. [1][2]

நன்மைகள்

[தொகு]

கோடை உழவு செய்வது,

  • மண்வளத்தை அதிகரிக்கும் - நைதரசன் நிலைப்படுத்தும் பயிர்களைப் பயிரிடுதல் அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும்.
  • நீரை நிலத்தில் தக்க வைக்கும்.
  • பூச்சித் தொல்லையைக் குறைக்கும். [3]

கோடை உழவு அவசியம்

[தொகு]

கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரையமாகும், கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் செகரிக்கபடுவதால் நிலபரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள், மற்றும் பூஞ்சான்கள் கட்டுபடுவதாக அறியப்படுகிறது.[4]

கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது, ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டள்ளது.[5][6] கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தாள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்பட்டும், வெயிலிலும் கொள்ளப்படுகிறது. மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புதிறன் வெகுவாக குறைக்கப்டுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமலர் செய்தி - விவசாயிகளுக்கு கோடை உழவு பயிற்சி
  2. "பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த சித்திரை கோடை உழவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் May 28, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தரும் தகவல்
  4. Agriculture|Advantages and risks of ploughing|வலை காணல்: சனவரி 15 2016
  5. What is summer ploughing?|டைம்ஸ் ஆப் இந்தியா|காணல்: சனவரி 15 2016
  6. கூடுதல் மகசூல் பெற கோடை உழவு அவசியம்|தினமணி|காணல்: சனவரி 15 2016
  7. உழவு அவசியம் ஏன்|தினமலர் காணல்: சனவரி 15 2016


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடை_உழவு&oldid=3598357" இலிருந்து மீள்விக்கப்பட்டது